சினிமா செய்திகள்

மலையாளத்தில் 200 கோடி வசூல் சாதனையை சாதித்த மோகன் லால்!

Published

on

லோ பட்ஜெட் மற்றும் லோ பாக்ஸ் ஆபிசுக்கும் பெயர் போன மலையாள சினிமா உலகில், 50 கோடி ரூபாய் வசூலை ஒரு படம் ஈட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாக இருந்த நிலையை, தனது புலி முருகன் படத்தின் மூலம் தகர்த்து, 100 கோடி பாக்ஸ் ஆபிஸை படைத்த மோகன் லால், தற்போது, தனது லூசிபர் படத்தின் மூலம் மலையாள சினிமா உலகின் முதல் 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் படம் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் இயக்கத்தில் உருவான லூசிபர் படம், வெற்றிகரமாக 50வது நாளை கடந்த நிலையில், 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இது மலையாள சினிமா உலகத்தை இந்தியளவில் வர்த்தக ரீதியாக கொண்டு செல்ல பல பாதைகளை அமைத்துள்ளது.

பல முறை தேசிய விருதுகளை வென்ற சாதனைகளை படைத்துள்ள மோகன் லால், அதிக வசூலை வாரிக் குவிக்கும் மலையாள சூப்பர்ஸ்டார் என்ற சாதனையும் நிகழ்த்தி வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version