சினிமா செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்திய ‘ருத்ர தாண்டவம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published

on

நாடக காதல் கதையம்சம் குறித்த திரவுபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன்ஜி என்பவர் இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் கடந்த சில வாரங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் மோகன் ஜி அறிவித்துள்ளார்.

‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதமாற்றம் செய்யும் கோஷ்டிகளை தோலுரிக்கும் வகையில் திரைக்கதை எழுதியுள்ள மோகன்ஜி ‘ருத்ர தாண்டவம்’ ஆட்டம் ஆரம்பம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். திரவுபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட்ஸ் இந்த படத்திலும் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, கௌதம்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆன அன்றே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனால் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version