கிரிக்கெட்

சதம் அடித்தது அஷ்வின்; ஆனால் அதற்கு சிராஜைப் புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் – காரணம் என்ன?

Published

on

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். அவரின் அற்புதமான சதத்திற்காகவும், ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய திறனிற்காகவும் ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இப்படி தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய அஷ்வினுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அஷ்வின், இரண்டாவது டெஸ்டில் 90களை நெருங்கும் போது, இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து விட்டது. கடைசி ஆளாக உள்ளே வந்தது சிராஜ் தான். அஷ்வின் இன்னும் சதத்தை ரீச் செய்ய சிறிது நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. அப்போது சிராஜ் பொறுப்பாக விளையாடி அஷ்வின், மைல்கல்லை எட்ட உறுதுணையாக இருந்தார்.

மேலும் அஷ்வின் சதம் அடித்த போது, அவரை விடவும் அதிகம் மகிழ்ச்சி கொண்டது சிராஜ் தான். இது குறித்தான காணொலி பார்ப்போரை நெகிழ வைத்தது.

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ‘சிராஜ், அஷ்வினின் சதத்திற்கு ரியாக்ட் செய்த விதம் மிகவும் கவனிக்கத்தக்கது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது தான் ஒரு குழுவாக விளையாடுவது என்பது… உங்கள் அணியைச் சேர்ந்தவரின் வெற்றியைக் கொண்டாடுவதும் அதில் பங்கெடுப்பதும் தான் முக்கியம். உன்னை நினைத்துப் பெருமை கொள்கிறேன் சிராஜ்’ என்று பதிவிட்டு சிராஜின் ரியாக்‌ஷன் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

seithichurul

Trending

Exit mobile version