சினிமா செய்திகள்

23 மொழிகளில் வெளியாகும் பிரதமர் மோடி திரைப்படம்!

Published

on

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் உருவாக்கவுள்ளார். மோடியின் பயோபிக் திரைப்படத்தை தனது சகோதரர் சுரேஷ் ஓபராய் மூலம் தயாரிக்கிறார் விவேக் ஓபராய்.

பிரதமர் மோடியின் வேடத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார். அஜித்தின் விவேகம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களுக்கு விவேக் ஓபராய் நன்கு பரீட்சையமானவர். இந்த திரைப்படத்திற்கு பிஎம் நரேந்திர மோடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இந்திய மொழிகளான 23 மொழிகளில் தற்போது மகாராஷ்ட்ர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மூலம் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் டிரெண்டிங்கில் மோடி பயோபிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா முன்னிலையில் உள்ளது.

இந்த படத்தை ஓமங் குமார் இயக்குகிறார். படம் 23 மொழிகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

seithichurul

Trending

Exit mobile version