இந்தியா

காணாமல் போன சௌக்கிதார்: மோடியின் தேர்தல் நாடகம்!

Published

on

சௌகிதார் என்ற சொல்லை தனது பெயருக்கு முன்னால் சேர்த்துகொண்டு டுவிட்டரில் இயங்கி வந்தார் பிரதமர் மோடி. மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கவதற்கு முன்னர் இந்த மாற்றத்தை செய்துகொண்ட மோடி, தனது அமைச்சர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அவ்வாறு செய்ய வலியுறுத்தினார்.

இதனையடுத்து பாஜக அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவரும் டுவிட்டரில் தங்கள் பெயருக்கு முன்னால் சௌகிதார் என்ற சொல்லை சேர்த்துக்கொண்டார்கள். சௌகிதார் என்றால் காவலன் என்று பெயர். இதனை வைத்து தேர்தலின் போது பிரச்சாரம் செய்துகொண்ட பிரதமர் மோடி நான் உங்களின் காவலன் என தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் முழுங்கி வந்தார்.

இந்நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த மோடி தற்போது தனது பெயருக்கு முன்னால் இருந்த சௌகிதார் என்ற சொல்லை டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார். தேர்தல் வெற்றிக்காக சௌகிதார் சொல்லை பயன்படுத்திய மோடி வெற்றி கிடைத்ததும் சௌகிதார் சொல்லை நீக்கிவிட்டார்.

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றவா சௌகிதார் என்ற சொல்லை மோடி பயன்படுத்தினார் என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. உண்மையாகவே மோடி ஒரு சௌகிதாராக இருந்திருந்தால் அதனை இப்படி டுவிட்டரில் விளம்பரபடுத்த தேவையில்லை. இல்லையென்றால் சௌகிதார் சொல்லை டுவிட்டரில் இருந்து நீக்காமல் அப்படியே தொடர்ந்திருக்கனும். ஏன் தேர்தல் முடிந்ததும் சௌகிதார் சொல்லை மோடி நீக்க வேண்டும். அப்படியென்றால் மோடி நடத்திய நாடகமா இது என கேள்வி எழுகிறது.

Trending

Exit mobile version