இந்தியா

நிதி நிர்மலா, உள்துறை அமித் ஷா: வெளியானது புதிய அமைச்சரவை பட்டியல்!

Published

on

பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய சிறப்பு அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் நேற்று பதவியேற்றனர். இவர்களுக்கான துறை நேற்று அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் யார் யார் எந்தெந்த துறைகளை நிர்வகிப்பார்கள் என்ற பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை இன்று வெளியிட்டது. அதில், ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத் துறை, அமித் ஷா- உள்துறை அமைச்சகம், நிதின் கட்கரி- சாலை போக்குவரத்துத் துறை, சதானந்த கவுடா- ரசாயனம் மற்றும் உரம், நிர்மலா சீதாராமன்- நிதித்துறை, ராம்விலாஸ் பஸ்வான்- உணவுத் துறை, நரேந்திரசிங் தோமர்- விவசாயத் துறை, ரவிசங்கர் பிரசாத்- சட்டத் துறை, ஹர்சிம்ரத் பாதல் – உணவு பதப்படுத்தும் தொழில் துறை, தாவர்சந்த் கெலோட்- சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை, ஜெய்சங்கர் – வெளியுறவுத் துறை, ரமேஷ் பொக்ரியால்- மனிதவள மேம்பாட்டுத் துறை, அர்ஜூன் முண்டா- பழங்குடியினர் நலத்துறை, ஸ்மிருதி இரானி- பெண்கள் மற்றும் நலத்துறை, ஹர்ஷவர்தன்- சுகாதாரத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பிரகாஷ் ஜவடேகர்- சுற்றுச் சூழல், வனம், தகவல் ஒளிபரப்பு துறை, பியூஷ் கோயல்- ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, முக்தர் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் நலத் துறை, பிரல்காத் ஜோஷி- நாடாளுமன்ற விவகாரத்துறை, நிலக்கரி, சுரங்கம் துறை, மகேந்திரநாத் பாண்டே- திறன் மேம்பாட்டு துறை, அரவிந்த் சாவந்த்- கனரக தொழில், கிரிராஜ் சிங்- கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத்துறை, கஜேந்திரசிங் ஷெகாவத்- ஜெய் சக்தி துறை ஆகிய துறைகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version