இந்தியா

வாரணாசியில் பிரதமர் மோடி 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published

on

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட பிரதமர் மோடி இந்தமுறை ஒரே ஒரு தொகுதியாக வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

முன்னதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில் அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அமோக வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் அவர் 3.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி 4414144 வாக்குகளை மொத்தமாக பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை 126867 வாக்குகளை பெற்று சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவ் பெற்றுள்ளார். 84246 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் அஜய். இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 26-ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version