தமிழ்நாடு

அத்தி வரதரை தரிசிக்க காஞ்சிக்கு வரும் பிரதமர் மோடி!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் காஞ்சியில் அத்திவரதை தரிசிக்க பிரதமர் மோடி வருகைதர உள்ளார்.

அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால் இதுவரை 8 பேர் உரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் விவிஐபி பாஸ் மூலம் மிகவும் வசதியாக வந்து பார்த்து செல்கின்றனர். இது பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி காஞ்சிபுரம் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவாறு இருப்பதால் தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நேற்று இரவு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனி நீண்ட நேரமாக நீடித்தது. இதனையடுத்து பிரதமரும் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் காஞ்சி உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version