தமிழ்நாடு

மோடி நினைத்தால் திமுக பஸ்பமாகிவிடும்: அதிமுக அமைச்சர் அதிரடி!

Published

on

தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில் இணையும் விழா தேனியில் நேற்று பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், உண்மையாக அதிமுகவிற்காக இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய உண்மை விசுவாசிகள் தொண்டர்கள் அங்கு இருப்பது நியாயமல்ல உங்களுடைய இயக்கம் உங்களின் தாய்க்கழகம் திராவிட இயக்கமாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் தான் நான் அவர்களையும் வருக, வருக, வருக என வரவேற்க விரும்புகின்றேன் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உண்மையான அண்ணா தலைமையில் உள்ள திமுக தொண்டர்கள் அத்தனை பேரும் அதிமுகவில் வந்து இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு விருப்பம் இருக்கிறது. எனவே அண்ணா தலைமையில் இருந்த திமுகவில் பணியாற்றிய, அண்ணா தலைமையை ஏற்றுக்கொண்ட திமுக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் அதிமுகவுக்கு வர வேண்டும். அதிமுக தொண்டர்கள் ஒருவரும் அங்கே போகமாட்டார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்லிக்கு 37 எம்பிக்கள் போகிறோம். பார்லிமெண்டையே முடக்கிவிடுவோம். மோடியை தடுத்துவிடுவோம். இந்த ஆட்சியை உண்டு இல்லை என ஆக்கிடுவோம் என்றனர். மோடி நினைத்தால் திமுக பஸ்பம் ஆகிவிடும். நாங்கள் நினைத்தால் திமுக கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு வலு இருக்கிறது என்று கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version