சினிமா செய்திகள்

மே 19 வரை மோடி பயோபிக்குக்கு தடை!

Published

on

மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் பிரசாரமாக மோடியின் பயோபிக் அமைந்து விடக் கூடாது என அந்த படத்தை வரும் மே 19வரை வெளியிட தடைவிதிக்கக் கோரி தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தது.

பிஎம் நரேந்திர மோடி படத்தை தடை செய்யக் கோரி எதிர்கட்சிகள் தொடுத்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் மோடியின் பயோபிக் படமான பிஎம் நரேந்திர மோடி படத்தை தேர்தல் முடியும் வரை அதாவது மே 19 வரை வெளியிட தடை விதிக்கக் கோரியுள்ளது.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் பிரதமர் மோடியாக நடித்துள்ளார்.

இதே போல, மம்தா பானர்ஜி பயோபிக் படத்துக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இணையத்தில் இருந்து அந்த படத்தின் டிரெய்லர் காட்சிகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது.

Trending

Exit mobile version