இந்தியா

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது. பிரதமராக மோடி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக தலைவர்கள் பலரும் நாட்டின் தலைநகர் டெல்லியில் குவிந்து வரும் வேளையில் பாஜக ஆளும் மாநில முதல்வர்களான மஹாராஷ்டிராவின் தேவேந்திர பட்நாவிஸ், உபியின் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் பாஜக ஆளாத பிற மாநில முதல்வர்கள் பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

சரியாக 7 மணிக்கு பிரதமர் மோடி விழா மேடைக்கு வந்து பாஜக தலைவர் அமித்ஷா, நிதின் கட்காரி அமர அதனை தொடர்ந்து துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வந்தார். தொடர்ந்து இறுதியாக விழா மேடைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்ததும் பதவியேற்பு விழா தொடங்கியது.

குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் நாட்டின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். தொடர்ந்து ராஜ்நாத் சிங்கும், அமித் ஷாவும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர்.

seithichurul

Trending

Exit mobile version