உலகம்

மோடி ரூ.30000 கோடியை திருடிவிட்டார்.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Published

on

டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமான படையிடம் இருந்து 30000 கோடி ரூபாயை திருடிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

நேற்று மாலை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று கூடி இந்த முடிவை எடுத்துள்ளது.

பதவி ஏற்று இரண்டாவது நாளே அலோக் வெர்மா நீக்கப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது டிவிட் செய்துள்ளார். மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடி ஏன் இப்படி செய்தார் என்றும் கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

அதில், பிரதமர் மோடியின் மனதை தற்போது பயம் ஆட்கொண்டு இருக்கிறது. அவரால் தூங்க முடியவில்லை. அவர் இந்திய விமான படையிடம் இருந்து 30000 கோடி ரூபாயை திருடிவிட்டார். அதை அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார்.

இரண்டு முறை தொடர்ச்சியாக அலோக் வெர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கியதே பிரதமர் மோடி தனது பொய்களிடம் சிக்கிக் கொண்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது, என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version