இந்தியா

காஷ்மீர் விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி!

Published

on

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி நேற்று 30 நிமிடங்கள் வரை தொலைப்பேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளாது.

சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இரண்டாக பிரித்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவின் உதவியுடன் இதனை ஐநா வரை கொண்டு சென்றது பாகிஸ்தான். ஆனால் அங்கு இந்தியாவுக்கு சாதகமாக முடிந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியும் இது தொடர்பாக வலியுறுத்தியதாக கூறினார். ஆனால் இந்தியா தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யப்போவதில்லை அமெரிக்கா அறிவித்தது.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைப்பேசியில் பேசினார். இந்நிலையில் மோடி, டிரம்ப் தொலைப்பேசி உரையாடல் நடந்துள்ளது. அப்போது மோடி காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான், சீனாவின் நிலைப்பாடுகள் குறித்தும் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பது குறித்தும் மோடி பேசியுள்ளார்.

Trending

Exit mobile version