உலகம்

நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட மோடி, இம்ரான் கான்: என்ன நடந்தது தெரியுமா?

Published

on

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜிங்பினை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கும் திட்டம் எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் இருவரும் நேற்று நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு பாகிஸ்தான் பிரதமரும் மோடியிடம் நலம் விசாரித்தார். அப்போது தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version