இந்தியா

குடியரசு தின விழாவில் தமிழகம் நிராகரிப்பு.. ஒன்றிய அரசு அடாவடி…..

Published

on

வருடம் தோறும் குடியரசு தினவிழா ஜனவரி 26ம் தேதி டெல்லியில்1.25 லட்சம் பார்வையாளர்களுடன் நடக்கும். ஆனல, கொரோனா பரவல் காரணமாக 24 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று விழாவுக்கான அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தமிழகம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வாகனத்தில் தேசிய அளவி பிரபலமானவர்கள் இல்லை எனக்குறி ஒன்றிய அரசு தமிழகத்தை நிராகரித்துள்ளது. தமிழக அரசின் வாகனத்தில் வ.உ.சி மற்றும் வேலுநாச்சியார் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்து. ஆனால், அவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி ஒன்றிய அரசு தமிழகத்தை நிராகரித்துள்ளது. இத்தனைக்கும் தமிழக வாகனம் 4வது சுற்றுவரை சென்றுவிட்டது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக காரணம் ஒன்றிய அரசின் அதிகாரிகள் தமிழக வாகனத்தை நிராகரித்துள்ளனர். தமிழகம் மட்டுமல்ல தென் தமிழகத்தில் பாஜக ஆட்டி நடைபெறாத தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய எந்த மாநிலங்களின் வாகனமும் இதில் இடம் பெறவில்லை. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்தின் அலங்கார வாகனத்திற்கு மட்டுமே ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி மேடை தோறும் திருக்குறைளை படிக்கிறார். தமிழ் மொழி பற்றி சிறப்பாக பேசுகிறார். ஆனால், குடியரசு தின விழாவில் தமிழகத்தை ஒன்றிய அரசு ஓரவஞ்சனையோடு நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version