இந்தியா

சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா என்றால் என்ன? மோடி அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யுமா? பயன்கள் என்ன?

Published

on

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடைபெற இருக்கும், குளிர் கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமூக பாதுகாப்பு குறியீடு மசோதாவை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனவே சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

அனைவருக்கும் காப்பீடு

சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பாலிசிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்.

பென்ஷன்

இந்தியர்கள் ஓய்வு காலத்தில் பென்ஷன் பெறுவதற்காக பெரியதாகச் சேமிப்பதில்லை என்று கூறப்படும் நிலையில், அனைவருக்கும் 60 வயதான உடன் குறைந்தபட்ச பென்ஷன் வழங்கும் திட்டம் சமூக பாதுகாப்பு குறியீடு மசோதா கீழ் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

மகப்பேறு நன்மைகள்

ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கும், முறையான மகப்பேறு நன்மைகள்.

இவை மட்டுமல்லாமல் குறைந்தபட்ச வருவாய் திட்டம் போன்ற, இன்னும் பல நன்மைகளுடன் கூடிய சமூகப் பாதுகாப்பு குறியீடு மசோதா நடக்கவிருக்கும் குளிர்கால கூட்டத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நவம்பர் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

குளிர்கால நாடாளுமன்ற கூட்டம் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி டிச்மபர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version