இந்தியா

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கா? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

Published

on

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது அலை உருவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரு நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு, இந்தியாவில் ஓமிக்ரன் வைரஸ் பாதிப்பு 3623 ஆக அதிகரித்துள்ளது. எனவே, பல மாநிலங்களும் இரவு ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கை அறிவிக்க துவங்கியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு முக்கிய ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது குறித்து பிரதமர் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு எனத் தெரிகிறது. மேலும், கடந்த ஆண்டுகளைப் போல், முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

குறிப்பாக, கொரோனா தடுப்பு பணிகள், தடுப்பூசி இயக்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும் பிரதமர் இன்று ஆய்வு செய்யவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version