இந்தியா

குடியரசுத்தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மோடி!

Published

on

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார்.

17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதனையடுத்து கடந்த 16-வது மக்களவை நேற்று கலைக்கப்பட்டதாக குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திரமோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கினார்.

இதையடுத்து நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்பிக்களின் பெயர்களையும், ஒதுக்கப்படும் துறைகளையும் அளிக்குமாறு மோடியிடம் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில் மே 30-ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version