இந்தியா

‘மம்தாவின் ஆட்டம் க்ளோஸ்…’- சொடுக்குப் போட்டு சவால்விட்ட மோடி

Published

on

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது.

இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ‘நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது.

மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணாமுல் கட்சியினர் தலித்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவுக்கு தெரியாமல் அவரது கட்சியினர் இதுபோன்று பேச முடியாது.

மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். உங்களது முழு கோபத்தையும் என் மீது காட்டுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை வங்க மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்’ என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version