தமிழ்நாடு

முக ஸ்டாலினுக்கு மோடி, ரஜினிகாந்த் வாழ்த்து!

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் இன்னும் ஓரிரு நாளில் முதல்வராக அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இதனை அடுத்து அவருக்கு தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ஏற்கனவே ராஜ்நாத்சிங், அரவிந்த் கேஜரிவால், மம்தா பானர்ஜி உள்பட பல தேசிய தலைவர்கள் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் சற்றுமுன் பிரதமர் மோடி, திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல அவர் மம்தா பானர்ஜிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version