இந்தியா

பாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்: மம்தா பானர்ஜி

Published

on

பாஜகவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் மறுபுறம் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் மகளிர் பேரணி ஒன்றை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கொல்கத்தா நகரமே இன்று காலை முதல் பரபரப்பில் உள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக நடத்திய பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி ’பாஜகவினர் ஓட்டுக்காக பணம் கொடுப்பார்கள், வேண்டாம் என்று கூற வேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு எங்களுடைய திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்று மம்தா பானர்ஜி பேசினார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி அரசு குறித்து கடுமையான விமர்சனம் செய்த பிரதமர் மோடி ’மம்தா பானர்ஜி கமிஷன் அரசு நடத்துகிறார் என்றும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் மேற்குவங்கம் இனி பாஜகவின் அங்கும் என்றும் மேற்கு வங்க மக்களின் கனவுகளை நிறைவேற்றவே நாங்கள் பாடுபடுகிறோம் என்றும் அவர் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version