உலகம்

செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனாவை கண்டறியலாம்: இன்று முதல் புதிய முறை அமல்!

Published

on

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பல புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது முகத்தை செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய புதிய முறை அபுதாபியில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ.டி.இ என்று கூறப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலை மூலம் செயல்படக்கூடிய சில்வர் நிறத்தினாலான ஸ்கேனர் ஒன்று ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு செல்போனுடன் இணைக்கப்படும். இந்த செல்போனை வைத்து பொது இடங்களில் வரும் பொதுமக்களிடம் அதாவது வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு வருபவர்களை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறியலாம்

வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இதற்கான ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்றும் உள்ளே வரும் பொதுமக்களை இந்த செல்போன் மூலம் ஸ்கேன் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செல்போன் மூலம் ஸ்கேன் செய்யும்போது பச்சை லைட் எரிந்தால் கொரோனா இல்லை என்றும், சிகப்பு லைட் எரிந்தால் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும் புரிந்து கொள்ளப்படும். ஒருவேளை சிகப்பு லைட் இருந்தால் உடனடியாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரோனாவை கண்டறியும் இந்த புதிய முறைக்கு அபுதாபி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version