இந்தியா

புதிய வரி விதிப்பு – செல்போன்கள் விலை உயரும் அபாயம்..?

Published

on

2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு மூலம் செல்போன்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரி பாகங்களுக்கான வரிச்சலுகை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான வரி சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் செல்போன்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சில உதிரி பாகங்களுக்கு 2.5% இறக்குமதி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் கழிவுகள் இறக்குமதி மீதான வரி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி மீதான வரி 12.5% குறைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்புல் கூறியுள்ளார். செயற்கை இழை மூலப்பொருள்களுக்கான வரி குறைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தாமிரக் கழிவுகள் மீதான வரி 5%-லிருந்து 2.5_ஆக குறைக்கப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version