செய்திகள்

மொபைல் வெடித்து மாணவன் பலி.!

Published

on

மலேஷியா: முகமது ஆடில் அஸாஹார் ஜஹரின் 16 வயது சிறுவன், தனது படுக்கையின் அருகில் காதுகள் எரிந்து தரையில் பிணமாக கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

முகமத் இரவு தூங்கும் பொழுது காதில் ஹெட்போன்ஸ் அணிந்து மொபைல் போனை சார்ஜில் வைத்ததினால் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதென்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

உறங்கும் பொழுது தலையணை அருகில் மொபைல் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தியுள்ளார். காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு பாடல் கேட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

காலை முகமதின் அறைக்குள் நுழைந்த அவரின் தாய், முகமத் தரையில் காதுகள் கருகி இரத்தம் கசிந்த நிலையில் தரையில் அசைவுகள் இல்லாமல் கிடந்த முகம்மதை பார்த்து அதிர்ந்து போனார். காரணம் ஏதும் தெரியாமல் உடனடியாக மருத்துவமனைக்கு முகம்மதை கொண்டு சென்றுள்ளனர்.

மருத்தவ பரிசோதனையில் அவர் உயிர் இழந்துவிட்டார் எனவும், உடலில் வேறு ஏதும் காயங்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மின்சாரம் தாக்கி தன உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயனர்கள் கண்டிப்பாக அவர்களின் போன்களை உறங்கும் பொழுது அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும், சார்ஜிங் இல் உள்ள பொழுது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுரைக்கப்படுகிறது.

Trending

Exit mobile version