தமிழ்நாடு

திமுகவில் இணையும் கமல் கட்சியிலிருந்த மகேந்திரன்!

Published

on

நடிகர் கமல் ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் மருத்தவர் மகேந்திரன். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில், அதற்கு பொறுப்பேற்று பதவி விலகினார். கட்சியிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில் மகேந்திரன், இன்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய உள்ளார்.

இது குறித்து மகேந்திரன் தரப்பில் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணி அளவில் இணைய உள்ளார் மகேந்திரன்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 78 பேர் மட்டும் இன்று இந்த இணைப்பு நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்வார்கள். கொரோனா தொற்றுக் காலம் என்பதால் சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 78 பேர்களுடன் கட்சியில் இணையவுள்ள மற்ற 11,000 பேர்களின் முழு விபரங்கள் அடங்கிய ஒரு தொகுப்புப் புத்தகத்தை மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்படும்.

 

Trending

Exit mobile version