தமிழ்நாடு

’காசுக்குத் தண்ணீரை விற்கும் அரசெல்லாம்…’- விளாசும் கமல்ஹாசன்

Published

on

’தண்ணீரை காசுக்கு விற்கும் ஒரு அரசு எல்லாம் ஒரு நல்ல அரசே இல்லை’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளாசியுள்ளார்.

மதுரையில் தொடங்கிய தனது பிரசார பயணத்தை விருதுநகர், சிவகாசி, திருநெல்வேலி என விரித்துக்கொண்டே செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். கமல் கூறுகையில், “எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் கூட பார்க்காதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் எம்.ஜி.ஆர் மடியிலேயே வளர்ந்தவன். நான்தான் எம்.ஜி.ஆர்-ன் வாரிசு. இங்கு எதுவும் நிரந்திரமில்லை.

பெண் இரண்டரை ஆண்டுகாலம் ஆண் இரண்டரை ஆண்டு காலம் ஆளலாம் எனப் பேசுபவர்கள் ஏன் தங்கள் கட்சியில் எத்தனைப் பெண் நிர்வாகிகள் உள்ளனர்? எங்கள் கட்சியின் ஆட்சியில் 20 பெண் அமைச்சர்களாவது இருப்பார்கள். சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி.  ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’. எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு. தண்ணீரை காசுக்கு விற்கும் என்பது எப்படி ஒரு நல்ல அரசாக இருக்க முடியும்?” எனப் பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version