தமிழ்நாடு

தமிழகத்தின் லஞ்ச பட்டியல்.. சிரித்த முகத்துடன் வெளியிட்டார் கமல்

Published

on

தமிழக அரசு துறைகளில் எந்ததெந்த சேவைகளுக்கு எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்த லஞ்சப் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

திருச்சியில் நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது என்றார்.

பின்னர் தமிழகத்தின் லஞ்சப்பட்டியல் என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுவதற்கு எவ்வளவு ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியதுள்ளது, ஆண் குழந்தைக்கு 500 ரூபாய், பெண் குழந்தைக்கு 300 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளளார்.

அத்தியாவசிய தேவைகளான மின் இணைப்புக்கு 15,000 ரூபாய், தண்ணீர் குழாய்க்கு 10,000 ரூபாய்  என அனைத்து சேவைகளுக்கும் பொதுமக்களிடம் எவ்வளவு ரூபாய் லஞ்சமாக பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவெறும் அரசு ஊழியர்கள் பெறும் லஞ்சம் தான் என்ற அவர், விரைவில் அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்று பேசினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version