தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை: கமல்ஹாசன்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது அவர் கோவையில் மீண்டும் பிரச்சாரம் செய்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் அவர்கள் பிரச்சாரம் செய்தபோது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களில் சிறை சென்றவர்கள் யாரும் இல்லை என்றும், ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தை சீரழித்தவர்கள் இனி எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்றும், தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக் கூட சரி செய்யாதவர்கள்,இனி எப்போது செய்வார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒரு குற்றவாளிகள் கூட இல்லை என கமல் கூறினாலும், சமீபத்தில் வருமான வரித்துறையினர் அவருடைய கட்சியின் பிரமுகர் வீட்டில் ரெய்டு நடந்தபோது ஒருசில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Trending

Exit mobile version