இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தாலும் ஒரு மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் என்பவர் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து செப்டம்பர் 13 ஆம் தேதி அந்த உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் ஆகஸ்ட் 31ஆம் தேதி என்றும் செப்டம்பர் 1ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு எம்பி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் திமுக உறுப்பினரான எம்எம் அப்துல்லா என்பவர் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ’2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக எம்எம் அப்துல்லா அவர்கள் போட்டியிடுவார் என அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Trending

Exit mobile version