தமிழ்நாடு

ஐபிஎல் போட்டிகள்… எம்எல்ஏக்களுக்கு பாஸ் வேண்டும்: அமைச்சர் உதயநிதியிடம் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை!

Published

on

தற்போது இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்எல்ஏக்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த பாஸ் அதிமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. எனவே அதிமுக எம்எல்ஏக்களுக்கும் பாஸ் வழங்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி.

seithichurul

Trending

Exit mobile version