இந்தியா

டீசர்ட் அணிந்து வந்த எம்.எல்.ஏவை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றிய சபாநாயகர்!

Published

on

டீ சர்ட் அணிந்து வந்த எம்எல்ஏ ஒருவரை குஜராத் மாநில சபாநாயகர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவை எம்எல்ஏக்களுக்கு டிரஸ் கோட் எதுவும் இல்லை என்பார்கள் என்றாலும் அவர்கள் மக்கள் பிரதிநிதி என்பதால் நாகரீகமான உடையில் வர வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

தமிழகம் என்றால் வேஷ்டி சட்டை, வட இந்திய மாநிலம் என்றால் அதற்குரிய உடைகளில் தான் எம்எல்ஏக்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்திற்கு எம்எல்ஏ ஒருவர் டீசர்ட் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏவான விமல்சூடாசாமா என்பவர் நேற்று சட்டப் பேரவைக்கு டீசர்ட் அணிந்து வந்தார். இதனை அடுத்து அவரை கவனித்த சபாநாயகர் உடனடியாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டார்.

சட்டப்பேரவை என்பது விளையாட்டு மைதானம் அல்ல என்றும் நீங்கள் விரும்பிய ஆடைகளை அணிந்து வர முடியாது என்றும் வீட்டில் நீங்கள் எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் ஆனால் சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரியாதை உள்ளது றும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version