தமிழ்நாடு

இதில் ‘ஸ்டாலினின் முதல் கையெழுத்து’ எதற்கு?

Published

on

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராகப் பதவி ஏற்பார்.

தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,

1) குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை.
2) பள்ளி மாணவர்களுக்குக் காலையில் ஊட்டச்சத்தாகப் பால்.
3) நீட் தேர்வை ரத்து செய்யச் சட்டம்.
4) தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கே.
5) 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி.
6) மாணவர்களுக்கு கைக் கணினி
7) மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடன் தள்ளுபடி.
8) ஆலயப் புனரமைப்புக்கு ரூ.1000 கோடி ரூபாய்.
9) கல்விக் கடன் தள்ளுபடி.
10) மசூதி, தேவாயலங்கள் சீரமைப்புக்கு ரூ.200 கோடி.
11) அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு.
12) மாணவிகளுக்கு இலவச நாப்கின்.
13) முதியோர் உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்வு.
14) புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம்.
15) விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை.
16) மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை.
17) சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம்.
18) அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லா பயண வசதி.
19) பெட்ரோல் ரூ.5/லிட்டர், டீசல் ரூ.4/லிட்டர் குறைப்பு.
20) பழைய ஓய்வூதியத் திட்டம்
21) ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.
22) மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இவற்றில் முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து எதற்காக இருக்கும். பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து கேட்டுப்பாருங்கள்.

Trending

Exit mobile version