தமிழ்நாடு

“மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும்”- எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் கடிதம்

Published

on

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது பற்றி முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணைக் கட்டுவது என்பது சரியாக இருக்காது. காவேரி ஆற்றிலிருந்து பெங்களூரு நகரத்துக்கு குடிநீர் தேவையென்றால், அதற்காக நீர் எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து மிக தொலைவில் இருக்கும் மேகதாதுவில் அணைக் கட்டுவது என்பது சரியானதாக இருக்காது.

தற்போதே பெங்களூருவிற்கு காவேரியிலிருந்து நீர் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் போதுமான கட்டுமான வசதிகள் உண்டு. மேலும் வெறும் 4.75 டி.எம்.சி நீருக்காக 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைக் கட்டுவதும் ஏற்படுயதன்று.

எனவே இந்த ஆதாரப்பூர்வமான விளக்கங்களைக் கருத்தில் கொண்டு மேகதாதுவில் அணைக் கட்டும் முடிவை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படிச் செய்வதன் மூலம் நம் இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லறுவு நீடிக்கும் என நம்புகிறேன்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version