தமிழ்நாடு

முக ஸ்டாலின் பிரதமராக வேண்டும்: திமுக எம்பியின் கருத்துக்கு நெட்டிசன்களின் கமெண்ட் !

Published

on

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமராக வேண்டும் என்றும் அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது என்றும் திமுக எம்பி கூறியதற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து முதல் முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அடுத்ததாக வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணி அமைக்க முயற்சி எடுத்து வருகிறார் என்பதும் அதற்காக அவர் பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமராக வேண்டும் என்றும் அதற்கான தகுதி அனைத்தும் அவருக்கு இருக்கிறது என்றும் மு க ஸ்டாலின் பிரதமரானால் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பியின் இந்த கருத்துக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் ஒரு சிலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதை நேரடியாக கூறாமல் மறைமுகமாக முக ஸ்டாலின் பிரதமராக வேண்டும் என்று திமுக எம்பி கூறுவதாக சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிராக தீவிர முயற்சி எடுக்கும் முகஸ்டாலின் பிரதமரானால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version