தமிழ்நாடு

‘மிஸ்டர் எடப்பாடி… அது வெற்றி நடை அல்ல, வெத்து நடை..!’- வம்பிழுக்கும் ஸ்டாலின்

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்று தேர்தலையொட்டி விளம்பரம் செய்கிறார். அது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என்று விமர்சித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தின் இரண்டாவது கட்டப் பயணத்தில் தற்போது ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் உனையூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியையும், அவர் தலைமையிலான அதிமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தார்.

“தீர்ந்து போயின நிலவும் பொலிவும் – தேய்ந்து போயின ஞாயிறும் ஒளியும் – கரிந்து போயின காடும் கழனியும் – காய்ந்து போயின கடலும் நதியும் – சரிந்து போயின கோட்டையும் கொடியும் – சாய்ந்து போயின மலைகளும் மாளிகைகளும் – மறைந்து போனது மண்ணுலகம் யாவும் – என்று கவிஞர் பெங்களூர் ப.இளவழகன் எழுதினார். அந்தளவுக்கு தமிழகத்தையே பாழ்படுத்திய ஆட்சி தான் அ.தி.மு.க. ஆட்சி. ஓராண்டு அல்ல, பத்தாண்டு காலமாக தமிழகத்தை பாழ்படுத்தி விட்டார்கள்.

ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா அதில் இருந்து மீள்வதற்காக 6 ஆண்டு காலம் அதில் போனது. அவரது மரணத்துக்குப் பிறகு 4 ஆண்டு காலம் தனது பதவிக் கொள்ள பழனிசாமியின் பதற்றமான காலம் கழிந்தது. இப்படி ஒட்டுமொத்தமாக மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை.

ஆனால் வெற்றி நடை போடும் தமிழகம் – என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல. வெத்து நடை போடும் தமிழகம். வளமான தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. அது உண்மையில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வளமான தமிழகம் தான். மற்றவர்களுக்கு தாழ்ந்த தமிழகம் தான்.” எனப் பேசியுள்ளார் ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version