தமிழ்நாடு

எச்.ராஜா ஒரு அயோக்கிய அரசியல்வாதி என உங்களுக்கு தெரியும்: ஸ்டாலின் அதிரடி பிரச்சாரம்!

Published

on

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் எச்.ராஜா சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவருக்கு எதிர்ப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவாக சிவகங்கையில் பிரச்சாரத்தி ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின்.

அப்போது பாஜக வேட்பாளர் எச்.ராஜா குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், உங்களுக்கு எல்லாம் தெரியும் எச்.ராஜாவைப் பற்றி அவர் ஒரு அயோக்கிய அரசியல்வாதி, அவருக்கு வாக்களித்தால் அவரால் பாராளுமன்றத்தில் உங்கள் சிவகங்கை தொகுதிக்கு தான் அசிங்கம் என கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதம் மோடி மற்றும் அருண் ஜெட்லிக்கு எதிராக பேசியதையும் சுட்டிக்காட்டி பேசினார் மு.க.ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version