தமிழ்நாடு

‘அதிமுக என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்…’- அரங்கத்தை அலறவிட்ட ஸ்டாலினின் பேச்சு

Published

on

இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவும் அதிமுகவும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த முறை தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாகக் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:-

அதிமுக என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் இனி தமிழகத்தில் அதிமுக ஆளுங்கட்சி அல்ல, எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்ற நிலை தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்னர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன்.

ஆனால், தொடர்ச்சியாக மக்களை சந்தித்து உரையாடும் போதும், கிராம சபைக் கூட்டங்களில் மக்களை சந்தித்தப் பின்னரும், தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாலும், என்னால் ஒரு விஷயத்தை மிக உறுதியாக சொல்ல முடியும். 200 தொகுதிகள் அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலை இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார். அவரின் பேச்சுக்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் அரங்கை அலறவிடும் அளவுக்கு கர கோஷம் எழுப்பினார்கள்.

Trending

Exit mobile version