தமிழ்நாடு

திமுக அரசு அமைந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

Published

on

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றும் அங்கு ஆக்சிஜனை உற்பத்தி தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்வதை உறுதி செய்வதற்காக உள்ளூர் பிரமுகர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட இருப்பதாகவும் அந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிக்க திமுக சமீபத்தில் ஒப்புக் கொண்டது என்பதும் முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தனது ஆதரவை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பேட்டி அளித்த போது திமுக அரசு அமைந்தால் தற்காலிக அனுமதி காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தற்காலிக காலம் முடிவடைந்த உடன் தங்களது ஆட்சியில் அந்த ஆலையை இழுத்து மூடுவோம் என்று மு க ஸ்டாலின் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் தற்காலிக அனுமதியை மேலும் நீடிக்க வேதாந்தா நிறுவனம் சுப்ரீம்கோர்ட் செல்லும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version