தமிழ்நாடு

ஒரு பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றாலும் அது நாட்டுக்கே கேடு: மு.க.ஸ்டாலின்

Published

on

தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது நாட்டுக்கே கேடு என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் உரையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில நாட்களாக வேட்பாளர் தேர்வு பணியில் இருந்த நிலையில் தற்போது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று நடந்த பிரச்சாரத்தில் பேசிய போது ’அதிமுகவும் பாஜகவும் இரண்டும் ஒன்றுதான் என்றும், தமிழ்நாட்டில் அதிமுக வெற்றி பெற்றாலும் பாஜக வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்றும் கூறினார். மேலும் தமிழகத்தில் ஒரு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அது நாட்டுக்கு கேடு என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் திமுகதான் அடுத்து ஆட்சியமைக்கும் என்று வெளி வந்துகொண்டிருக்கும் கருத்துக் கணிப்பால் கட்சியினர் கவனக்குறைவாக இருக்க கூடாது என்றும் தீவிர பிரச்சாரம் பிரச்சாரம் மற்றும் ஓட்டு வேட்டை நடத்த வேண்டும் என்றும் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

அதேபோல் கூட்டணி கட்சியினரும் போட்டியிடும் தொகுதிகளிலும் திமுகவினர் திமுக வேட்பாளரே போட்டியிடுவது போன்று பணி செய்ய வேண்டும் என்றும் அவர் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Trending

Exit mobile version