தமிழ்நாடு

கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன்: ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

Published

on

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் நேற்று திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் விழாவில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது அந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ஸ்டாலின் கனவு காண்கிறார் என என்னை கிண்டல் செய்தார்கள். ஆனால் மக்கள் அவர்களின் கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டார்கள் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், இன்னும் சிலர் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக தெரிவித்தார்கள். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. ஸ்டாலின் இருக்கக் கூடிய இடம் இது. கருணாநிதியின் மகன் நான் இருக்கிறேன் என்று கூறினார். இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக கூறியதற்கு இந்த பதிலடி என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Trending

Exit mobile version