தமிழ்நாடு

ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள 2 வீராங்கனைகளுக்கு அரசு வேலை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Published

on

தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்கள் பதக்கம் வென்றால் கோடிகளும் லட்சங்களும் பரிசு அளிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தமிழக வீரர்கள் வீராங்கனை பதக்கங்களை வென்று நாடு திரும்புவார்கள் என்றும், இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சென்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் அரசு வேலை வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்.

ஏழ்மை நிலையிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க சென்றுள்ள சுபா வெங்கடேசன் தனலட்சுமி ஆகிய இருவரையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் தாயகம் திரும்பியவுடன் அரசு பணிக்கான ஆணையை முதலமைச்சர் வழங்குவார் என்றும் அதற்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியை அழைத்து தாயகம் திரும்பும் சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version