தமிழ்நாடு

ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின்: பதவியேற்பு எப்போது?

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார். நேற்று அண்ணா அறிவாலயத்தில் தான் சட்டமன்ற கட்சி தலைவராக தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்தார்.

இதையடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு அவர் உரிமை கோரினார். இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழக கவர்னரை முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்த போது அவருடன் துரைமுருகன், டிஆர் பாலு, கேஎன் நேரு, ஆர்எஸ் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சி நடைபெற உள்ளது என்பதும் முக ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version