இந்தியா

பச்சையாய் பொய் சொல்லும் நிர்மலா சீதாராமன்: தோலுரித்த மு.க.ஸ்டாலின்!

Published

on

கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதலை தவிர வேறு எந்த தாக்குதலும் பாஜக ஆட்சியில் நடக்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால் இது பச்சைப் பொய் எனவும், அந்த பச்சைப் பொய்யை சொல்லியிருக்கும் நிர்மலா சீதாராமனின் கவனத்துக்கு நான் கொண்டு வருகிறேன் என சில தாக்குதல்களை மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.

* 2014-ஆம் ஆண்டு உரியில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
* 2016-ஆம் ஆண்டு பாமேபரில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இரண்டு பேர் பலியானார்கள்.
* அதே 2016-ஆம் ஆண்டு ஜம்மு ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் பலியாகினார்கள்.
* இப்போது புல்வாமாவில் 44 வீரர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

என பாஜக ஆட்சியில் நடைபெற்ற தாக்குதல்களை பட்டியலிட்ட முக.ஸ்டாலின், இதையெல்லாம் மூடி மறைத்து எந்த தாக்குதலும் நடக்கவில்லை என ஒரு அப்பட்டமான பொய்யை அம்மையார் நிர்மலா சீதாராமன் சொல்லுகிறார் எனச் சொன்னால் இது எதை காட்டுகிறது? என கேள்வி எழுப்பினார்.

seithichurul

Trending

Exit mobile version