தமிழ்நாடு

மே 2க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது: முக ஸ்டாலின்

Published

on

மே 2ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலையே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் மே 2ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

முதல் அலை தாக்கத்தின்போது, நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது, எனினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உளவியல் சிக்கல்கள், தனிநபர் பாதிப்புகள் இவற்றிலிருந்து இன்றுவரை முழுமையாக மீள முடியவில்லை

தொழில் வாய்ப்புகளை இழந்தோர், வேலையினைப் பறிகொடுத்தோர் இப்போதும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். அதனால், இந்த இரண்டாவது அலைத் தாக்கத்தின்போது குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், பொதுமக்களும் திமுகவினரும் அவற்றுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும்

மேலும், “மே 2க்குப் பிறகும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம். அதுவரை, கொரோனா பரவல் குறையும் வகையில் உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள்வோம். நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம். நம்மைப் போன்றவர்களுக்கு பக்க பலமாக நிற்போம்”

இவ்வாறு முக ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version