தமிழ்நாடு

நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டாம்: ஸ்டாலின் அந்தர் பல்டி!

Published

on

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, இரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்தார். இந்நிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை கைவிடப்போவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று தொடங்கிய தமிழக சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் ஜூலை 30-ஆம் தேதிவரை 23 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை. சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ஆம் தேதிக்கான பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும். அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

இந்த சூழலில் இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என இன்று சபாநாயகரிடத்தில் கடிதம் கொடுத்துள்ளோம். எனவே அதனை வலியுறுத்தப்போவதில்லை.

முன்பு இருந்த சூழலின் அடிப்படையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அது தேவையில்லை என்று தெரிந்து மீண்டும் கடிதம் கொடுத்திருக்கிறோம் என்றார் மு.க.ஸ்டாலின்.

seithichurul

Trending

Exit mobile version