தமிழ்நாடு

முதல்முறையாக கோட்டையில் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வராக முதல்முறையாக பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள கோட்டையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன்னர் கொடியேற்றினார். முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியக்கொடி ஏற்றிய பின் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது உரையில் ’ஏற்றத்தாழ்வு அற்ற, உயர்வு தாழ்வு அற்ற, ஒரு மனித உரிமை சமூகமாக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சமூகமானது சிந்தனையால், பண்பாட்டால், நாகரீகம் பழக்க வழக்கத்தால் உயர்வடைய வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற தாழ்வற்ற உயர்வு தாழ்வற்ற ஒரு மனித உரிமை சமூகமாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேன்மைமிகு தமிழ்நாட்டை உருவாக்க நினைக்கும் தமிழ்நாடு அரசுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் உருவாய் 6 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்படும் என்றும், கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் இதுவரை ரூ.8500 வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.9,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்றும் பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் உழைத்த நான் தமிழ்நாட்டு மக்களால் முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version