தமிழ்நாடு

தமிழிசை தோல்வியடைவதற்காகவே தூத்துக்குடியில் களமிறக்கப்பட்டுள்ளார்!

Published

on

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. காரணம் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் இந்த தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

இதனையடுத்து தூத்துக்குடியில் போட்டியிடும் தனது தங்கைக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இது கலைஞர் இல்லாமல் நடைபெறக் கூடிய முதல் தேர்தல். அவர் இல்லாத நிலையில் அவருடைய மகனான நான் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் அவர்கள் கலைஞருடைய பிள்ளைகள்தான் என்று கூறியுள்ளேன்.

ஆனால் தூத்துக்குடியில் கலைஞரின் பிள்ளையே போட்டியிடுகிறார். கனிமொழியை அறிமுகம் செய்யும்போது என்னை நானே உங்களிடத்தில் அறிமுகம் செய்வதாகத்தான் பொருள்படும். கனிமொழி போட்டியிடுவது கலைஞர் போட்டியிடுவது, ஏன் நானே போட்டியிடுவது போலத்தான். அதனை உணர்ந்து நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

மேலும் கனிமொழி, பார்லிமென்ட் டைகர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். 2007ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் வாதாடி வெற்றிகண்டிருக்கிறார். பாஜக வேட்பாளரான தமிழிசை, தோல்வியடைவதற்காகவே களமிறக்கப்பட்டுள்ளார் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version