தமிழ்நாடு

‘இது என்ன பெருசு… வேற ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு..!’- அதிமுக ‘வாஷிங் மெஷின்’ அறிவிப்பை நக்கலடித்த ஸ்டாலின்

Published

on

சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக, சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு அறிவிப்புகள் அரசியல் தளத்தில் கவனம் ஈர்த்தன. 

அதிமுகவின் அறிக்கையில் குறிப்பிடத்தக சில அறிவிப்புகள்: 

  • அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்

 

  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்

 

  • இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்

 

  • மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும் 

 

  • மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும்

 

  • அனைத்து மாவட்டங்களிலும் மினி ஐ.டி.பார்க்

 

  • மதுரை விமான நிலையத்திற்கு பச்ம்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர்

 

  • கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி

 

  • அனைவருக்கும் இலவச சூரிய சக்தி மின் அடுப்பு

 

  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்

 

  • ரேசன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும்

 

  • அனைத்து மாணவர்களுக்கும் 2 ஜிபி டேட்டா

 

  • கல்விக் கடன் ரத்து

MK Stalin - edappadi palanisamy

  • வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி

 

  • அனைவருக்கும் அம்மா வாஷிங்மெஷின் திட்டம்

 

  • அம்மா இல்லம் திட்டம் மூலம் அனைவருக்கும் வீடு

இதில், இலவச வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என சொன்ன திட்டத்தை, திருவாரூரில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். ‘அதிமுக, தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை எல்லாம் தயார் செய்யவில்லை. திமுக என்ன சொன்னதோ அதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை என்று வெளியிட்டு விட்டார்கள். பெயர் மட்டும் மாறி இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் இலவச வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. அதைப் புரிந்து கொண்டு இப்படியெல்லாம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். வாஷிங் மெஷின் என்ன, குடும்பத்துக்கு ஒரு விமானம் கொடுப்போம் என்று அதிமுக சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை’ என்று கிண்டல் செய்யும் தொனியில் உரையாற்றினார். 

 

Trending

Exit mobile version