தமிழ்நாடு

காங்கிரஸ் வேண்டாம்: ஸ்டாலினுக்கு தைரியம் கொடுத்த திமுக நிர்வாகிகள்!

Published

on

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும் பரவாயில்லை நாங்கள் இருக்கிறோம் தைரியமாக களம் இறங்குங்கள் என திமுக முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு தைரியம் கொடுத்து உள்ளதால்தான் ஸ்டாலின் தற்போது உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் இருபதுக்கு மேல் தர முடியாது என்று திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை வாரி கொடுத்ததால்தான் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றும் காங்கிரசுக்கு கொடுத்த தொகுதிகளில் எல்லாம் திமுக போட்டியிட்டு இருந்தால் கண்டிப்பாக அதிமுக வெற்றியை தடுத்து ஆட்சியை பிடித்து இருக்கலாம் என்றும் திமுக நிர்வாகிகள் முக ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்

எனவே காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு போனாலும் பரவாயில்லை நாம் நேருக்கு நேராக அதிமுகவுடன் மோதுவது தான் நல்லது என்று திமுக நிர்வாகிகள் கொடுத்த தைரியத்தில் தான் தற்போது முக ஸ்டாலின் அதிரடியாக செயல்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட அவர் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லை என்றால் அதிகபட்சமாக 10 தொகுதிகளில் தான் இழப்பு ஏற்படும் என்றும் ஆனால் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் தொகுதிகளில் திமுக போட்டியிட்டால் அதிக அளவில் வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. முக ஸ்டாலினின் இந்த அதிரடி முடிவு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version