தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினின் சிறுபிள்ளைத்தனம்: டிடிவி தினகரன் அதிரடி பேட்டி!

Published

on

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.

ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக என புகழாரம் சூட்டி அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தினார். ஸ்டாலினின் இந்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பாக ராகுல் காந்திக்கு சிறிது சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலினின் இந்த கருத்து குறித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தினகரன், காங்கிரஸுக்கு குறிப்பாக ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். கூட்டணிக் கட்சிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால்தான் நான் பிரதமர் வேட்பாளராக இருப்பேன் என்று ராகுலே கூறியுள்ளார்.

தன்னை தேசியத் தலைவராகக் காட்டிக்கொள்ள ஸ்டாலின் செய்தது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஸ்டாலின் செய்வதைப் பார்த்தால் பாஜகவுக்கு உதவி செய்கிறார் என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. பாஜகவுடன் திமுக ஒரு புரிந்துணர்வில் இருக்கிறது என்பதுதான் இதிலிருந்து வெளிப்படுகிறது என விமர்சித்தார்.

seithichurul

Trending

Exit mobile version